யாழில் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞன் விமான நிலையத்தில் கைது
யாழ்ப்பாணத்தில் பல்வேறு வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டு இந்தியாவில் தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் ஒருவர் யாழ். விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விமானத்தில் ஊடாக நாடு திரும்பிய இவரை யாழ். மாவட்ட குற்றத் தடுப்புபிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு தப்பித்த தேவா, பிரசன்னா ஆகியோரின் சகாவே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றத் தடுப்புபிரிவு பிரிவினர் கைது
இந்தியாவில் இருந்து இன்று(03.11.2023) காலை விமானம் மூலம் பலாலி விமான நிலையத்தை வந்தடைந்த அவரை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புபிரிவு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும், பொலிஸாரால் தேடப்பட்டு வந்த 27 வயதுடைய சந்தேக நபர் என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.





விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam
