கிளிநொச்சியில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த குழுவின் அட்டகாசம்
கிளிநொச்சி - பளை சோரன்பற்று பகுதியில் வீடு ஒன்றின் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (13) இரவு இடம்பெற்றுள்ளது.
பளை சோரன்பற்று பகுதியில் அமைந்துள்ள பொன்னம்பலம் சுதாகரன் எனும் குடும்பஸ்தரின் வீட்டிற்குள் நேற்று (13) இரவு 08.30 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள் உள்நுழைந்துள்ளனர்.
அத்துமீறி நுழைந்த நபர்கள்
முகத்தை மூடி மறைத்து கத்தி, வாள்கள், பெற்றோல் குண்டுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு நபர்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.
இதன்போது இரண்டு மோட்டார்சைக்கிள்கள், கதவுகள், கண்ணாடிகள், குளிர்சாதனப்பெட்டி, அலுமாரிகள், ஏனைய பெறுமதியான ஆவணங்களுடன் வீட்டு உபகரணங்களும் அடித்து நொருக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளன.
விசாணை முன்னெடுப்பு
வீட்டில் இருந்தவர்கள் கூக்குரலிடத் தொடங்கியதும் தாக்குதலை மேற்கொண்ட நபர்கள் பெற்றோல் போத்தலையும் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டதன் பிரகாரம் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 13 மணி நேரம் முன்

பாகிஸ்தான் உளவுத்துறையுடன் ரகசிய தொடர்பு., இந்தியாவின் DRDO விருந்தினர் இல்ல மேலாளர் கைது News Lankasri
