யாழில் குடும்பத்தலைவர் மீது தாக்குதல்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
யாழில் கூரிய ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளினால் குடும்பத்தலைவர் மீது தாக்குதல் நடத்தி அதனை காணொளியாக டிக்டொக் செயலியில் வெளியிட்ட 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் சந்தேகநபர்கள் நேற்றையதினம்(13.05.2023) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் சந்தேகநபர்களை எதிர்வரும் (26.05.2023) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை பதில் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடூர தாக்குதல்
நேற்றையதினம் குடும்பஸ்தர் ஒருவரை கூரிய ஆயுதத்தாலும் பொல்லுகளாளும் தாக்கிய சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது நிதிமன்றதினால் மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ஒரே வாரத்தில் ரூ.48,000 கோடி லாபம்! அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அடைந்துள்ள புதிய உச்சம்! News Lankasri
