அமெரிக்காவுக்குப் பதிலாக மாற்று வான் பாதுகாப்பு அமைப்பை நாடும் சுவிட்சர்லாந்து
அமெரிக்காவின் 'பேட்ரியட்' ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளைக் கொள்வனவு செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, பிரான்ஸ், இஸ்ரேல் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளின் உற்பத்தியாளர்களுடன் சுவிட்சர்லாந்து புதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.
உக்ரைன் போரின் விளைவாக, அமெரிக்காவிடமிருந்து 2026 முதல் 2028ஆம் ஆண்டுக்குள் கிடைக்கவிருந்த பேட்ரியட் ஏவுகணைகளின் விநியோகக் காலம் மேலும் நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் வரை பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இதனால் சுவிட்சர்லாந்து பாதுகாப்பு அமைச்சகம் மாற்று வழிகளை ஆராயத் தொடங்கியுள்ளதுடன், பேட்ரியட் அமைப்புக்காக அமெரிக்காவிற்கு வழங்கப்பட்டு இடைநிறுத்தப்பட்டிருந்த கொடுப்பனவுகளையும் தற்போது மீண்டும் ஆரம்பித்து, கூடுதல் செலவுகளின்றி அதனைப் பெற்றுக்கொள்ளவும் முயன்று வருகிறது.
உயிரிழப்புக்கள் 100,000ஐத் தாண்டக்கூடும்! வெனிசுலா நிலநடுக்கம் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்
பாதுகாப்பு கொள்வனவுகள்
ஐரோப்பாவில் மோசமடைந்து வரும் பாதுகாப்புச் சூழலைக் கருத்திற்கொண்டு, நடுநிலை நாடான சுவிட்சர்லாந்து எந்தவொரு தாக்குதலுக்கும் எதிராகத் தன்னை மிக விரைவாகப் பாதுகாத்துக் கொள்ளவும், கூடுதல் வான் பாதுகாப்புத் திறனைக் கொண்டிருக்கவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, இரண்டாவது வான் பாதுகாப்பு அமைப்பொன்றைக் கொள்வனவு செய்வதன் மூலம், ஒரேயொரு விநியோகஸ்தர் மற்றும் விநியோகச் சங்கிலியை மட்டுமே நம்பியிருக்கும் நிலை குறைக்கப்பட்டு, நாட்டின் பாதுகாப்புப் பலப்படுத்தப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த மாதம் சுவிட்சர்லாந்து பாதுகாப்பு கொள்வனவுகள் குறித்து பரிசீலித்தபோது ஜெர்மனியும் ஒரு சாத்தியமான விநியோக நாடாகப் பெயரிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.