பல்வேறு சர்வதேச நாடுகளுடன் சுவிட்சர்லாந்து மேற்கொண்ட பாரிய ஒப்பந்தம்
சுவிட்சர்லாந்து, இந்தியா மற்றும் பிற 73 நாடுகளுடன் கிரிப்டோ சொத்துக்களுக்கான Automatic Exchange of Information (AEOI) ஒப்பந்தம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதன்மூலம் வெளிநாடுகளில் அறிக்கை செய்யப்படாத கிரிப்டோ நிதிகளை இந்திய அரசு கண்டறிய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை இந்தியா - சுவிட்சர்லாந்து இடையே வங்கிக் கணக்குகள் மற்றும் மற்ற நிதி சொத்துகளுக்கான வருடாந்திர தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் செயல்பட்டு வருகிறது.
AEOI உடன்படிக்கை
அதே மாதிரியாக, தற்போது கிரிப்டோ சொத்துகளுக்கான AEOI உடன்படிக்கை வந்தால், வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட நிதிகளைத் துல்லியமாக கண்டறியும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

இந்த ஒப்பந்தம் 2026 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது, மற்றும் முதல் தகவல் பரிமாற்றம் 2027இல் நடைபெறும் என சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கிரிப்டோ நாணயங்கள் குறித்த தெளிவான சட்டங்கள் இல்லை, ஆனால் மற்றநாடுகளில் இவை சட்டபூர்வமான நாணயங்களாக உள்ளன.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தொடர்ந்து நிதி நிலைத்தன்மைக்கு ஆபத்தானவை என எச்சரித்து வருகிறது. இந்தியர்களால் கிரிப்டோவில் பதுக்கப்பட்டிருக்கக் கூடிய பாரிய அளவிலான நிதி இருப்பு குறித்து அதிகாரப்பூர்வ மதிப்பீடு இல்லை, ஆனால் தானாக நிகழும் தகவல் பரிமாற்றம் அதை வெளிக்கொணர உதவும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam