இலங்கைக்கு கிடைத்துள்ள டொலர்கள்! மத்திய வங்கியின் அறிவிப்பு
2025 மே மாதத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல் 641.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா வருவாய்
இதேவேளை 2025 மே மாதத்தில் பதிவான சுற்றுலா வருவாய் 164.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் வாராந்திர பொருளாதார சுட்டெண் அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2025 ஜனவரி முதல் மே வரையிலான மொத்த பணவனுப்பல் 3,102.2 மில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது.
பணவனுப்பல்
இது 2024 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் பதிவான 2,624.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை விட 18.2% அதிகமாகும்.
இதற்கிடையில், 2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மொத்த சுற்றுலா வருவாய் 1,543.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
இது 2024 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் பதிவான 1,405.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை விட 9.8% அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு வாரங்களுக்குள் அநுர அரசு திட்டமிட்டிருக்கும் அதிரடி நடவடிக்கை! சிறைக்குச் செல்லப்போகும் முக்கியப்புள்ளி..





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 15 மணி நேரம் முன்

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri
