ஜனநாயக தமிழ் கூட்டமைப்புக்கு ஆதரவளிக்கும் மன்னார் சுயாதீன குழு
மன்னார் - நானாட்டான் பிரதேச சபையில் சுயாதீன இளைஞர் குழுவாக போட்டியிட்ட சுயேட்சை குழுவினர் தமது ஆதரவை ஜனநாயக தமிழ் கூட்டமைப்புக்கு வழங்கியுள்ளதாக குறித்த சுயாதீன இளைஞர் குழுவின் தலைவர் ஜி.எம்.சீலன் தெரிவித்தார்.
மன்னாரில் இன்றையதினம் (06.06.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பகிரங்க அறிவிப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், பல கட்சிகள் தங்களிடம் ஆதரவு கோரி இருந்த போதிலும் தேசியத்தின் பால் நிற்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தங்களது ஆதரவை வழங்குகின்றோம்.
தேசிய மக்கள் சக்தி தங்களுக்கு உப தவிசாளர் பதவி தருவதாக கோரிய போதும் அதை தாங்கள் நிராகரித்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தங்கள் ஆதரவை வழங்கியுள்ளதாகவும் குறித்த சுயாதீன இளைஞர் குழுவின் தலைவர் ஜீ.எம்.சீலன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கை தமிழரசு கட்சி தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து நானாட்டான் பிரதேச சபையை தாரைவார்க்க உள்ளதாகவும் குறித்த விடயத்தில் அவர்களின் நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 21 மணி நேரம் முன்

அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள் ஒன்று சேர்ந்த 3 சீரியல் நாயகிகள்.. என்ன விஷயம், வீடியோவுடன் இதோ Cineulagam

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri
