டக்ளஸுடன் இணையும் சுமந்திரன் - மணிவண்ணன்

Sri Lankan Tamils Douglas Devananda M. A. Sumanthiran Manivannan
By Sajithra Jun 06, 2025 08:09 PM GMT
Report

இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனின் வழிகாட்டல், பணிப்புரை - அனுசரனையில் தான் அந்த கட்சி தலைவர் சீ.வீ.கே.சிவஞானம்,  சிறிதர் தியேட்டருக்கு வந்து, தமது கட்சிக்கு ஆதரவு கோரினார் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் நேற்று ஈ.பி.டி.பி தலைமையகமான சிறிதர் தியேட்டருக்கு சென்று, உள்ளூராட்சி சபைகளில் ஈ.பி.டி.பியுடன் கூட்டாக இணைந்து ஆட்சியைப் பிடிப்பது பற்றி பேசினார்.

இந்த பேச்சின் போது, தமிழரசு, ஈ.பி.டி.பி கூட்டில், வி.மணிவண்ணன் தரப்பும் இணைய விரும்புவதையும் சீ.வீ.கே சுட்டிக்காட்டியிருந்தார். சீ.வீ.கே, சிறிதர் தியேட்டர் சென்றது தமிழரசு கட்சி உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் கொதிப்படைய வைத்தது. கட்சித்தலைமையை அவர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

சந்திப்பு குறித்த விமர்சனங்கள்.. 

இந்த நிலையில், இன்று (6) சுமந்திரன் வெளியிட்ட காணொளியில், “சிறிதர் தியேட்டர் சென்றது தொடர்பான விமர்சனங்களையடுத்து கட்சித்தலைவருடன் பேசினேன்.

டக்ளஸுடன் இணையும் சுமந்திரன் - மணிவண்ணன் | Douglas Sumanthiran Manivannan Tamil Political

இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு கூட்டத்தில்- உள்ளூராட்சிசபைகளில் அதிக ஆசனங்களை பெற்ற தமிழ் கட்சி அந்தந்த பகுதிகளில் ஆட்சியமைக்க வேண்டும்.

தமிழரசு கட்சி அதிக ஆசனம் பெற்ற சபைகளில் ஆட்சியமைக்க ஏனைய கட்சிகள் உதவ வேண்டும். வேறொரு தமிழ் கட்சி அதிக ஆசனம் பெற்ற சபையில் ஆட்சியமைக்க தமிழரசு கட்சி உதவும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்த தீர்மானத்தையே டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்தேன் என கட்சித்தலைவர் சீ.வீ.கே என்னிடம் தெரிவித்தார்“ என குறிப்பிட்டிருந்தார்.

டக்ளஸுடன் இணையும் சுமந்திரன் - மணிவண்ணன் | Douglas Sumanthiran Manivannan Tamil Political

இதேவேளை, இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் , "2001 இல் யாழ். தீவகத்தில் தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராசாவை படுகொலை செய்ய, இராணுவ ஆதரவுக்குழுவான டக்ளஸ் தலைமையிலான ஈ.பி.டி.பி முயன்றது என குறிப்பிட்டார். இந்த விடயங்கள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்தை அறிய தமிழ் பக்கம் இன்று அவரை தொடர்பு கொண்டது.

எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்ட காணொளி கருத்தை டக்ளஸ் தேவானந்தா மறுத்தார். தமிழரசுகட்சியின் அரசியல்குழு தீர்மானம் எதையும் சீ.வீ.கே தன்னிடம் தெரிவிக்கவில்லை என்றார். மற்றொரு கட்சியின் அரசியல்குழு தீர்மானம் இன்னொரு கட்சியை எப்படி கட்டுப்படுத்தும் என கேள்வியெழுப்பினார்.” சீ.வீ.கே என்னிடம் தனது கட்சி தீர்மானம் எதையும் கூறவில்லை.

இலங்கை தமிழ் அரசு கட்சி உள்ளூராட்சிசபைகளில் அதிகாரத்தை கைப்பற்ற நாமும் ஆதரவளிக்க வேண்டுமென்றார். எங்களுடன் மணிவண்ணனும் இணைந்து செயற்படுவார் என கூறினார்“ என்று டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

உட்கட்சி விவகாரம் 

அதேவேளை, “இலங்கை தமிழ் அரசு கட்சி, சீ.வீ.கே.சிவஞானம் என்னிடம் உதவி கேட்பது இது முதல்முறையல்ல. கடந்த உள்ளூராட்சி அதிகாரசபை தவிசாளர் தெரிவு சமயத்திலும் சீ.வீ.கே.சிவஞானம் என்னிடம் நல்லூரில் தனது ஆளான தியாகமூர்த்தி வெற்றியீட்ட ஆதரவளிக்குமாறு கேட்டிருந்தார்.

பிற சபைகளிலும் தமிழரசு கட்சியின் பிற பிரமுகர்கள் பேசியிருந்தனர். கடந்த முறை அவர்களை நாம் ஆதரித்திருந்தோம்“ டக்ளஸ் என்றார்.

டக்ளஸுடன் இணையும் சுமந்திரன் - மணிவண்ணன் | Douglas Sumanthiran Manivannan Tamil Political

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் கருத்து தொடர்பில் பதிலளித்த போது, நாரந்தனை சம்பவம் பற்றிய தனது தரப்பு கருத்துக்களை தெரிவித்தார்.

இந்த விவகாரம் மேல்முறையீட்டில் இருப்பதால் விபரமாக பேச விரும்பவில்லையென்றார். “சிறீதரனுக்கு கட்சிக்குள் பிரச்சினையுள்ளது. சிறீதரன், சுமந்திரன் அணிகள் மோதிக்கொள்கிறார்கள்.

மேலும், அவர்களின் பிரச்சினை உட்கட்சி பிரச்சினை. கட்சி செயலாளர் சுமந்திரனின் வழிகாட்டல், அனுசரணை, பணிப்புரையின் அடிப்படையில் தலைவர் எமது அலுவலகத்துக்கு வந்திருப்பார். தெரியாமல் வந்திருக்க முடியாதுதானே. எம்மிடம் கட்சித்தலைவர் ஆதரவு கோரினார். இதற்கு சிறீதரன் ஆதரவா, சுமந்திரன் ஆதரவா என நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாதுதானே“ என டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார். 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Basel, Switzerland

25 Jan, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Washington, United States

19 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, சிவபுரம், வவுனிக்குளம், வவுனியா, பாண்டியன்குளம்

26 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Bremgarten, Switzerland

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Helsingør, Denmark

24 Jan, 2026
மரண அறிவித்தல்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

22 Jan, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Toronto, Canada

11 Feb, 2014
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, Kuala Lumpur, Malaysia

26 Jan, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், திருச்சி, India

29 Jan, 2020
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, காரைநகர், Birmingham, United Kingdom, Croydon, United Kingdom

21 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி தெற்கு, London, United Kingdom

28 Jan, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டி, நாவற்குழி, London, United Kingdom

30 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Lausanne, Switzerland

28 Jan, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கனடா, Canada

27 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Scarborough, Canada

27 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, தெஹிவளை

07 Feb, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kingston, United Kingdom, Wallington, United Kingdom

30 Dec, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், நோர்வே, Norway

16 Jan, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, சிட்னி, Australia, Thun, Switzerland

08 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சாய் தெற்கு, Rinteln, Germany

07 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Horsens, Denmark

23 Jan, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்புத்துறை, கொழும்பு, London, United Kingdom

22 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

28 Jan, 2024
அந்தியேட்டிக் கிரியையும், 31ம் நாள் நினைவஞ்சலியும்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, பேர்ண், Switzerland

30 Jan, 2023
மரண அறிவித்தல்

யாழ் தலையாழி, Jaffna, Saint-Ouen-l'Aumône, France

19 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொக்குவில், வட்டக்கச்சி, Gagny, France

21 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US