இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்த திறந்தவெளி ஹோட்டல்!
சுவிட்சர்லாந்து-ஆல்ப்ஸ் மலை பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 6,463 அடி உயரத்தில் திறந்தவெளி ஹோட்டல் ஒன்று 2016 ஆண்டு திறக்கப்பட்டுள்ளது.
இந்த திறந்தவெளி ஹோட்டல் தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ஹோட்டலில் தங்குவதற்கு ஒரு இரவுக்கான விலை சுமார் £251 சுவிஸ் பிராங்க் என கூறப்படுகின்றது.
அதேவேளை இந்த ஹோட்டலில் ஜன்னல்,கதவு, சுவர் என்று எதுவும் இல்லாமல் மலையில் தாங்கி இயற்கை அழகை ரசிக்க வசதியை வழங்குகிறது. இது நல் ஸ்டெர்ன் (Null Stern) என்று அழைக்கப்படுகிறது.
வெவ்வேறு இடங்களில் ஏழு படுக்கைகள்
இயற்கை ரசிகர்கள் ஆல்ப்ஸ் மலையில் இருந்து மாலை சூரியனை பார்ப்பதில் தொடங்கி இரவு முழுவதும் திறந்த வெளியில் மலையின் சாரலில் படுத்துக்கொண்டு காலை கண்விழிக்கும்போதே சூரிய உதயத்தை காணும் வாய்ப்பு கிடைக்கும்.
அங்குள்ள 'நவீன பட்லர்' எனப் பயிற்சி பெற்ற உள்ளூர்வாசி ஒருவர்,விருந்தாளிகளுக்குச் சேவை செய்வதற்கும் அதிகக் காற்றில் படுக்கைகளை உருவாக்குவதற்கும் எப்போதும் அருகிலுள்ள ஒரு குடிசையில் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஹோட்டலின் குளியலறை படுக்கையில் இருந்து சிறிது தூரத்தில் உள்ளதாகவும் இந்த ஹோட்டல் சுவிட்சர்லாந்தின் வெவ்வேறு இடங்களில் ஏழு படுக்கைகளை வழங்குகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri
