வீடற்ற நிலைக்குத் தள்ளப்பட்ட மகிந்த! இலவச வீட்டை வழங்க தயாராகும் மகா சங்கத்தினர்..
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கான உத்தியோகபூர்வ இல்லமொன்றை அன்பளிப்புச் செய்ய மகாசங்கத்தினர் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான வரப்பிரசாதங்களை ரத்துச் செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போதைக்குத் தங்கியிருக்கும் விஜேராம மாளிகை வெகுவிரைவில் அவரிடம் இருந்து மீளப் பெறப்படவுள்ளது.
உத்தியோகபூர்வ இல்லம் அன்பளிப்பு..
இந்நிலையில் இந்நாட்டின் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தலைமை தாங்கிய ஜனாதிபதி என்ற வகையில் மகிந்த ராஜபக்சவுக்கு உத்தியோகபூர்வ இல்லமொன்றை அன்பளிப்புச் செய்ய மகாசங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.
அது தொடர்பான தங்களின் தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஊடாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அறிவித்துள்ளனர்.
பௌத்த மதத்தின் அனைத்து நிகாய பிரிவுகளையும் சேர்ந்த முக்கிய தேரர்கள் இதற்காக ஒன்றிணைந்து செயற்படுவதுடன், மகிந்தவுக்கு உத்தியோகபூர்வ இல்லமொன்றை அன்பளிப்புச்செய்வதற்காக நிதியமொன்றையும் ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளனர்.
மகாசங்கத்தினரின் இந்த நடவடிக்கையானது அரசாங்கத்துக்கு எதிரான நேரடி சவாலாக மாறக் கூடும் என்றும் தேரர்கள் தலைமையிலான எதிர்ப்பு செயற்பாடு வெகுவிரைவில் நாடு தழுவிய ரீதியில் அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்பியக்கமாக மாற்றம் பெறக் கூடும் என்றும் அரசியல் அவதானிகள் எச்சரித்துள்ளனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்



