சிக்கப் போகும் முன்னாள் அரசியல்வாதிகள்! நாடாளுமன்றத்தில் தீவிர விசாரணை
முன்னாள் அரசியல்வாதிகள் பலரும் பெற்றுக் கொண்ட கொடுப்பனவுகள் குறித்து இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடிகளைத் தடுப்பதற்கான ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
தற்போதைய நிலையில் முன்னாள் முக்கிய அரசியல்வாதிகள் 20 பேர் குறித்த விசேட விசாரணைகளை இலஞ்சம் மற்றும் ஊழல்இ மோசடிகளைத் தடுப்பதற்கான ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.
குறித்த அரசியல்வாதிகளின் வருமானம், சொத்து விபரங்கள் குறித்தே தற்போதைக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
விசேட விசாரணை
அவர்களின் வருமானத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் கடந்த காலத்தில் அவர்கள் நாடாளுமன்றத்தின் ஊடாக பெற்றுக்கொண்ட கொடுப்பனவுகள் குறித்து உறுதிப்படுத்திக் கொள்வதற்கான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடிகளைத்தடுப்பதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நாடாளுமன்றத்தில் விசேட விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
கொடுப்பனவு விபரங்கள்
நாடாளுமன்ற செயலகம், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பணியகம் என்பவற்றில் இருந்து முன்னாள் அரசியல்வாதிகளின் கொடுப்பனவு விபரங்களை இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடிகளைத்தடுப்பதற்கான ஆணைக்குழு பெற்றுக் கொண்டுள்ளது.
அதனடிப்படையில் முன்னாள் அரசியல்வாதிகளுக்கு எதிரான விசாரணைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் தெரிய வந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்



