இலங்கை வந்த சுவிஸ் நாட்டு பெண் திடீர் மரணம்
இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த சுவிட்சர்லாந்து பெண் திடீர் மரணமடைந்துள்ளார்.
சுகயீனமடைந்து ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று பிற்பகல் உயிரிழந்துள்ளார் என எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர் எலினா டனல் எனப்படும் 28 வயதான வெளிநாட்டு பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலா பயணம்
உயிரிழந்த பெண் கடந்த மாதம் 31ஆம் திகதி தனது நெர்லாந்து காதலனுடன் இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவர் நுவரெலியா, கண்டி பயணம் மேற்கொண்டு நேற்று எல்ல பிரதேசத்திற்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட இருவரும் அங்கு ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.
திடீர் சுகயீனம்
இதன் போது அங்கு திடீரென சுகயீனமடைந்த பெண் தியதலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பதுளை வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri