சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய சட்டத்தரணி யாழ் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கடிதம்
பல்கலைக்கழகத்தில் கருத்துச் சுதந்திரம் இல்லாத நிலையில், நீதித்துறையின் சுதந்திரம் குறித்து பேசுவதற்கு சட்டத்துறை என்னை அழைத்தது ஒரு முரண்நகை என சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எழுதிய கடிதத்திலேயே இதனை கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் “நெருக்கடியான காலங்களில் நீதித்துறை சுதந்திரம்” என்ற விரிவுரை இரத்துச் செய்யப்பட்டது தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதியபோதே இதனை தெரிவித்துள்ளார்.
துணைவேந்தருக்கு எழுதப்படும் கடிதம்
அக்கடிதத்தில், “சமகால பிரச்சினைகளுக்கான சட்ட மன்றத்தின் ஒரு பகுதியாக 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் திகதி திட்டமிடப்பட்டிருந்த “நெருக்கடியான காலங்களில் நீதித்துறை சுதந்திரம்” என்ற விரிவுரை இரத்து செய்யப்பட்டது தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு எழுதப்படும் கடிதம்.
இந்த விரிவுரை திடீரென இரத்து செய்யப்பட்டது தொடர்பாக எழுப்பப்படும் ஊடகக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த பொதுக் கடிதத்தை எழுதுகிறேன்.
யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் கருத்துச் சுதந்திரம் தொடர்பாக ஏற்பட்ட ஒரு பாரதூரமான பிரச்சினையை எழுப்பவே நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இந்த பொதுக்கடிதத்தை உரிய முறையில் பரிசீலிக்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தெரிவித்துள்ளதாவது,




பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
