முல்லைத்தீவில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பில் சந்தேகம்: விசாரணைகள் முன்னெடுப்பு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மன்னாகண்டல் பகுதியில் நேற்று முன்தினம் (18.08.2024) 28 அகவையுடைய குடும்பஸ்தரான கந்தையா மோகனதாஸன் என்பவர் உயிரிழந்த நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரது உயிரிழப்பு குறித்து சந்தேகம் வெளியிட்டதை தொடர்ந்து இது தொடர்பிலான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழப்பிற்கான காரணங்கள்
குறித்த குடும்பஸ்தரின் உயிரிழப்பிற்கான காரணங்கள் சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரோத பரிசோதனையில் ஹெரோயின் ,ஜஸ் போதைப்பொருள் உடலில் அதிகளவு காணப்பட்டுள்ளமை இறப்பிற்கான காரணம் என சட்டவைத்திய அதிகாரியால் அறிக்கையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த உடலம் இழுத்து செல்லப்பட்டு மாட்டுக்கொட்டிலில் போடப்பட்டுள்ளதையும் புலனாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் உயிரிழந்தவரின் நண்பர்களிடம் வாக்குமூலம் பெற்று விசாரணைகளை முடக்கியுள்ளார்கள்.
புதுக்குடியிருப்பு பகுதி ஒன்றில் நண்பர்களுடன் ஹெரோயின் ,ஜஸ் போதைப்பொருள் பாவித்துள்ளதாகவும் அதன் பின்னர் அவர் உயிரிழந்த நிலையில் நண்பர்களால் மன்னாகண்டல் பகுதியில் உள்ள இவர் காவல் காக்கும் மாட்டுத்தொழுவத்திற்கு உடலினை கொண்டு சென்று போட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும், உயிரிழந்தவர் வசந்தபுரம் மன்னாகண்டலை பிறப்பிடமாகவும் 2ம் வட்டாரம் கோம்பாபில் கைவேலி
புதுக்குடியிருப்பினை வசிப்பிடமாகவும் கொண்ட ஒரு பிள்ளையின் தந்தையாவார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam