மின்சார சபை ஊழியர்கள் பணி இடைநீக்கம்: வெளியான காரணம்
மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்த சம்பவம் தொடர்பில் மின்சார ஊழியர்கள் சிலர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த தகவலை இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.
மின்சார விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்திய வர்த்தமானி அறிவித்தல் மற்றும் அனைத்து ஊழியர்களின் விடுமுறையை இரத்துச் செய்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளன.
மின்சார சபை தனியார் மயமாக்கல்
இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற போராட்டத்தின் போது பண கவுண்டரை மூடி மின் கட்டணம் செலுத்துவதற்கு இடையூறு விளைவித்த 15 காசாளர்கள் (cash counters) பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின்சார சபையை தனியார் மயமாக்கப் போவதாக அண்மையில் அதன் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புப் பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்தன.
இதன்படி, மின்சார சபையின் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களை மீறும் வகையில் சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கும் ஊழியர்களை பணி இடைநீக்கம் செய்து உரிய ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறு மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இலங்கை மின்சார சபை நிர்வாகத்திற்கு பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN |

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
