கட்சியில் இருந்து உறுப்பினர்கள் இடைநிறுத்தம்! - ரிஷாட் பதியுதீன் அதிரடி நடவடிக்கை
கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவு வழங்கிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
இதன்படி, அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இஷ்ஹாக் றஹ்மான், அலி சப்ரி ரஹீம், முஷாரப் முதுநபீன் ஆகியோரை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவர்களுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் எனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாக அந்த கட்சி அறிவித்துள்ளது.
2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான முதலாவது வாக்கெடுப்பிலும் இறுதி வாக்கப்பெடுப்பிலும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் தலைவர் ரிஷாத் பதியூதீன், இஷ்ஹாக் றஹ்மான், அலி சப்றி றஹீம் மற்றும் முஷாரப் முதுநபீன் ஆகிய நால்வரும் எதிராக வாக்களிக்க வேண்டும் என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அரசியல் அதிகார சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
இந்த தீர்மானம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கும் மின்னஞ்சல், குறுஞ்செய்தி, வட்ஸ்அப், கடிதம் மூலமாகவும் அறிவிக்கப்பட்டிருந்ததாக அந்த கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கட்சியின் தலைவர் ரிஷாட் பதியூதீன் தவிர்ந்த ஏனைய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக இன்று வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
இது தொடர்பில் நேற்று ஒத்திவைக்கப்பட்ட கட்சியின் அரசியல் அதிகார சபைக் கூட்டம் இன்று கூடியபோது ஆராயப்பட்டதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, கட்சியின் யாப்பில் அரசியல் அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ள சரத்துக்களின் அடிப்படையில், கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்கள் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 13 மணி நேரம் முன்

விடுதலையான பேரறிவாளன்! மகனை கட்டிபிடித்து இனிப்பு ஊட்டி கொண்டாடிய தாய் அற்புதம்மாள் வீடியோ News Lankasri

சூரியனால் இந்த 4 ராசிக்கும் மின்னல் வேகத்தில் பணம் தேடி ஓடி வர போகுது...உங்க ராசி இதுல இருக்கா? Manithan

கோலிவுட் திரையுலகமே எதிர்பார்க்கும் விக்ரம் படத்தின் கதை இது தான் ! கொண்டாடப்போகும் ரசிகர்கள்.. Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022