கொழும்பில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த கொலை முயற்சி.. சிஐடியிடம் சிக்கிய நால்வர்
வெள்ளிக்கிழமை இரவு கொழும்பில் துப்பாக்கிச் சூடு நடத்த திட்டமிட்டதாகக் கூறப்படும் நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர், வெடிமருந்துகள் மற்றும் ஐஸ் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், 60 கிராமுக்கும் அதிகமான போதைப்பொருள், ஒரு முச்சக்கர வண்டி மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டிலிருந்து உத்தரவு
மட்டக்குளிய, ஹொரண, வனவாசல மற்றும் களனி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 32 முதல் 35 வயதுடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைதாகியுள்ளனர்.

குறித்த நபர்கள், வெளிநாட்டில் உள்ள இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் வழிகாட்டுதலின் கீழ் கிராண்ட் பாஸின் மஹவத்த பகுதியில் ஒரு நபரைச் கொலை செய்ய தயாராகி வந்ததாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்கள், நேற்று மாளிகாகந்த மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட நிலையில் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் மேலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.