மன்னாரில் இளம் குடும்பப் பெண்ணை காணவில்லை : தவிக்கும் உறவுகள்
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த இளம் குடும்பப் பெண்ணை காணவில்லை என மன்னார் பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மன்னார் சௌத்பார் பகுதியில் வசித்து வந்த, அ.கான்சியூஸ் சகாய கீர்த்தனா என்ற 21 வயதுடைய பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணமான இந்தப் பெண்ணை, அவரது கணவர் நேற்றைய தினம்(10.01.2026) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு பற்சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார்.
காணாமல் போன குடும்ப பெண்
சிகிச்சைக்காக அவரை வைத்தியசாலையில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்த கணவன் சிறிது நேரத்தின் பின்னர் மீண்டும் வைத்தியசாலைக்குச் சென்று பார்த்த போது அவருடைய மனைவியை காணவில்லை.

அங்கிருந்தவர்களிடம் விசாரித்த பின்னர், உறவினர்களுடன் சேர்ந்து கணவர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து, காணாமல் போனதாக கூறப்படும் அப்பெண், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்து முச்சக்கர வண்டி ஊடாக மன்னார் பேருந்து நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து வவனியா பேருந்தில் பயணித்துள்ளமை தெரியவந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam
ஆதி பிளாக் மெயில் செய்ததால் தற்கொலை செய்துகொண்டு இறந்த இலங்கை பெண்... தாமரைச்செல்வி ஷாக்கிங் நியூஸ் Cineulagam