மட்டக்களப்பு - கொழும்பு கடுகதி தொடருந்து சேவை மீண்டும் ஆரம்பம்
கடந்த 45 நாட்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புலத்தேசி கடுகதி தொடருந்து சேவை ஆரம்பமாகியுள்ளது.
மட்டக்களப்பில் இருந்து நேரடியாக இன்று (11.01.2026) நண்பகல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சருக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் இந்த தொடருந்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடுகதி சேவை முன்னெடுப்பு
வாரஇறுதியில் பொது மக்களின் நலன் கருதி ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த சேவையானது கடந்த வெள்ளிக்கிழமை நண்பகல் கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கான கடுகதி சேவையை முன்னெடுத்திருந்தது.
இந்த நிலையில் மட்டக்களப்பில் இருந்து நண்பகல் 11.50 இற்கு ஆரம்பமான கொழும்புக்கான இக்கடுகதி சேவை இரவு 8 மணி இது கொழும்பை சென்றடையும்.
எதிர்காலத்தில் பொதுமக்கள் மாணவர்களின் நலன் கருதி இந்த சேவையானது மேலும் விஸ்தரிக்கப்பட உள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.




