வெனிசுலா ஜனாதிபதி சிறைபிடிக்கப்பட்ட இரகசியம்! பின்னணியில் சிக்கிய 60 பேர்
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை நாடு கடத்த அமெரிக்காவிற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் 60 பேரை நிகரகுவா பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிக்கோலஸ் மதுரோ கைது தொடர்பில் வெளிநாட்டு ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகரகுவா ஜனாதிபதியின் உத்தரவு
இதற்கமைய, அவர்களில் 49 பேர் இன்னும் காவலில் இருப்பதாகவும், அவர்களின் நிலைமை குறித்த தெளிவான தகவல் வெளியாகவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

நிகரகுவா ஜனாதிபதி டேனியல் ஒர்டேகாவின் உத்தரவின் பேரில் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இருப்பினும், கைது செய்யப்பட்ட 60 பேரில் ஒன்பது பேர் பாதுகாப்புப் படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.