தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்கு மதுபான போத்தல்களை விற்பனைக்காக கொண்டு சென்ற ஒருவர் கைது
பொகவந்தலாவ பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தோட்ட பகுதிகளுக்குக் குறுக்கு வீதியில் மதுபான போத்தல்களை விற்பனைக்காகக் கொண்டு சென்ற சந்தேக நபர் ஒருவர் பொகவந்தலாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவரை இன்று (21.05.2021) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
இதன்போது சந்தேக நபரிடமிருந்து 25 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கோவிட் அச்சுறுத்தலைக் கருத்திற்கொண்டு மாலை 6 மணியுடன் மதுபானசாலைகளை
மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், ஹட்டன் மற்றும் நோர்வூட் பகுதிகளில்
அந்த உத்தரவு மீறப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக
மேலும் தெரிவித்துள்ளனர்.