யாழில் மூன்று ஆடுகளை திருடிய சந்தேகநபர் கைது
மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான ஆறு ஆடுகளை திருடிய இருவர் நேற்றிரவு(12) சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் சாவகச்சேரி - தச்சன் தோப்பு பகுதியில் ஆறு ஆண்டுகள் களவாடப்பட்டு இருந்தன.
இது குறித்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
நீதிமன்றத்தில் முற்படுத்த
அந்தவகையில் சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் நெறிப்படுத்தலின் கீழ், சாவகச்சேரி பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான குழுவினர் இது குறித்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வந்த வாகனங்களின் தகட்டு இலக்கங்களை பெற்று அதன் மூலம் விசாரணைகளை மேற்கொண்டதன் அடிப்படையில் அந்த வாகனம் புத்தள மாவட்ட பதிவில் இருந்தமையும், அந்த வாகனதை துன்னாலை பகுதியைச் சேர்ந்த ஒருவர் வாங்கியமையும் தெரியவந்தது.
அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் நேற்றிரவு நெல்லியடி - துன்னாலை பகுதியில் வைத்து களவுக்கு பயன்படுத்திய வாகனத்தையும், 5 ஆடுளையும் மீட்டதுடன் இரண்டு சந்தேகநபர்களையும் கைது செய்தனர்.
சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
