செம்மணி புதைகுழியில் சிறுவர் ஆடையின் சிதைவுகள் கண்டுபிடிப்பு..!
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 45ஆவது நாளாக இன்று(06.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, 08 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 5 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
494 என்பு கூடுகள் அகழ்வு
அத்துடன் நாணய குற்றி ஒன்றும், சிறுவர்களுடைய ஆடைகளின் பொத்தான்களும் சான்று பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன.
இதன்படி, செம்மணி புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 99 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், 499 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 494என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நீதி திணைக்களக் கண்காணிப்பு அமைப்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் - தொடர் வீழ்ச்சியில் ட்ரம்ப் ஆட்சி

