புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்.. இரு தமிழர்களும் உள்ளடக்கம்
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் மூன்று புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, நீதிச் சேவையின் சிறப்புப் பிரிவைச் சேர்ந்த பின்வரும் அதிகாரிகள் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நியமனங்கள் கையளிப்பு
பெருமாள் சிவகுமார் (தற்போது யாழ்ப்பாண மாவட்ட நீதிபதியாக பணியாற்றுகிறார்).
ஆனந்தி கனகரத்தினம் (தற்போது நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட உதவிச் செயலாளராகப் பணியாற்றுகிறார்)
மற்றும் ஞானேஷ லலித் கன்னங்கர (தற்போது கொழும்பு மாவட்ட நீதிபதியாக பணியாற்றுகிறார்).
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, இன்று (23) காலை ஜனாதிபதி செயலகத்தில் இவர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமணாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.



இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது... யாரும் அதைச் சொல்ல விரும்புவதில்லை: ட்ரம்ப் வெளிப்படை News Lankasri
Bigg Boss 10: முனியம்மாவின் 200 கிலோ சிக்கன் Luxury Purchases.... விஜய் சேதுபதி கேட்ட கேள்வி Manithan
Bigg Boss 10: பிக்பாஸ் வீட்டிற்குள் போன் செய்த விஜய் சேதுபதி! மாட்டிக் கொண்ட குழந்தை முக கொலைகாரி Manithan
தேர்தல் பின்னடைவு ஒரு பக்கம்... விற்பனை இல்லாமல் Cybertruck உற்பத்தியை நிறுத்தும் எலான் மஸ்க் News Lankasri