வருமான வரி அறவீட்டில் ஏற்பட்ட குழப்பம் - நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்த பொலிஸார்

Sri Lanka Police Sri Lankan Tamils Batticaloa Sri Lankan Peoples Sri Lanka Government
By Kumar Sep 22, 2026 10:43 PM GMT
Report

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் காத்தான்குடி நகரசபையினால் வருமான வரி அறவீடு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், இரு தரப்பினருக்கு இடையில் பாரிய மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று(22.09.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபை - காத்தான்குடி நகரசபையின் எல்லைப்பகுதியாகவும் மாநகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியாகவும் காணப்படும் மஞ்சந்தொடுவாய் 16ஆம் வட்டாரத்தில் உள்ள பள்ளிவாயல் ஒன்றில்நேற்றைய தினம்(22) மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர்கள் வருமான வரியை பெற்றுக்கொள்வதற்கான நடமாடும் சேவை முன்னெடுப்பதற்கான சென்றிருக்கின்றனர்.

இந்தவேளையில், குறித்த பள்ளிவாயலில் ஏற்கனவே காத்தான்குடி நகரசபையின் ஊழியர்களினாலும் வருமான வரிகள் அறவிடும் நடமாடும் சேவை நடத்தப்பட்டுக் கொண்டிருந்தது.

மாநகரசபை ஊழியர்களுடன் ஏற்பட்ட மோதல்

இதன்போது, மாநகரசபை ஊழியர்கள் மட்டக்களப்பு மாநகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் காத்தான்குடி நகரசபையினர் வருமான வரியை அறிவிடுவதை கடுமையாக எதிர்த்த நிலையில், அங்குவந்த மட்டக்களப்பு மாநகரசபையின் குறித்த வட்டார உறுப்பினர்களும் வருகைதந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

வருமான வரி அறவீட்டில் ஏற்பட்ட குழப்பம் - நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்த பொலிஸார் | Confusion Regarding Income Tax Collection

இந்த செயற்பாடுகள் கடந்த நான்கு வருடமாக காத்தான்குடி நகரசபையினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற போதிலும் அதற்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்காத காரணத்தினாலேயே இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தமது நகரசபை தவிசாளர் மற்றும் உயர் அதிகாரிகள் தமக்கு வழங்கிய பணிப்புரைகளையே தாங்கள் முன்னெடுப்பதாக இங்குவருகைதந்து வருமான வரியை அறவீடுசெய்த அதிகாரிகள் தெரிவித்த நிலையில், அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்படவே காத்தான்குடி பொலிஸாருக்கு இது தொடர்பில் மட்டக்களப்பு மாநகரசபையினால் முறைப்பாடளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இடைநிறுத்தப்பட்ட வரித்தொகை சேகரிப்பு பணி

இரு தரப்பினரையும் வருமான வரி அறவீடுசெய்வதை நிறுத்தி நிர்வாக ரீதியாக தீர்மானம் ஒன்றை எடுத்த பின்னர், அறவீட்டை முன்னெடுக்குமாறும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு இரு தரப்பினரையும் வருகை தருமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வருமான வரி அறவீட்டில் ஏற்பட்ட குழப்பம் - நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்த பொலிஸார் | Confusion Regarding Income Tax Collection

அதன் பின்னர், இரு தரப்பினரும் தமது செயற்பாடுகளை நிறுத்தி அங்கிருந்து சென்றனர்.

குறித்த பகுதியில் மட்டக்களப்பு மாநகரசபையினர் முறையான அறவீடுகளை முன்னெடுக்காத நிலையில் பொதுமக்கள் இவ்வாறு காத்தான்குடி நகரசபை அறவீடுகளை முன்னெடுக்கும்போது அங்கு வருமான வரிகளை செலுத்தும் நிலையேற்படுவதாக குறித்த பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

4 வருடங்களாக முடிவுக்கு வராத பிரச்சினை

இது தொடர்பான பிரச்சினை நான்கு வருடங்களுக்கு மேல் நிலவுவதன் காரணமாக இதற்கான நிரந்தர தீர்வொன்றை காணுமாறும் இதன் மூலம் எதிர்காலத்தில் முறுகல்நிலைகள் ஏற்படாமல் இருக்க இருதரப்பினரும் முடிவுகளை எடுக்கவேண்டும் எனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

வருமான வரி அறவீட்டில் ஏற்பட்ட குழப்பம் - நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்த பொலிஸார் | Confusion Regarding Income Tax Collection

மட்டக்களப்பு மாநகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசமாகவும் அப்பகுதியில் மட்டக்களப்பு மாநகரசபையின் வட்டார உறுப்பினர்களும் இருக்கும் நிலையிலும் காத்தான்குடி நகரசபையினர் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து எதிர்காலத்தில் இந்த பிரச்சினைக்கான தீர்வினை காணுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் உறுதியளித்துள்ளார்.   

வருமான வரி அறவீட்டில் ஏற்பட்ட குழப்பம் - நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்த பொலிஸார் | Confusion Regarding Income Tax Collection

வருமான வரி அறவீட்டில் ஏற்பட்ட குழப்பம் - நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்த பொலிஸார் | Confusion Regarding Income Tax Collection

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அதிரடி தீர்ப்பின் பின் சுரேஷ் சலேவின் எதிர்காலம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அதிரடி தீர்ப்பின் பின் சுரேஷ் சலேவின் எதிர்காலம்

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் 15 பேருக்கு 200 ஆண்டுகளுக்கு மேல் சிறை - கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் 15 பேருக்கு 200 ஆண்டுகளுக்கு மேல் சிறை - கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

you may like this video


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US