அமெரிக்க நீதி திணைக்களக் கண்காணிப்பு அமைப்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் - தொடர் வீழ்ச்சியில் ட்ரம்ப் ஆட்சி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தின் கீழ், அந்நாட்டு நீதித் திணைக்களத்தில் (DOJ) இடம்பெறும் தவறுகளைக் கண்காணிக்கும் இரு முக்கிய உள்நாட்டு கண்காணிப்பு அமைப்புகளின் இயக்கம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நீதிமன்றங்களின் கடுமையான விமர்சனங்கள் மற்றும் அரசியல் தலையீடுகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள அச்சம் காரணமாக, இந்த துறைகளில் பணியாற்றிய கணிசமான அதிகாரிகள் விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஊழியர் பற்றாக்குறை
தொழில்முறைப் பொறுப்பு அலுவலகம் (OPR) மற்றும் தலைமைப் பரிசோதகர் அலுவலகம் (OIG) ஆகிய இரு முக்கிய கண்காணிப்புப் பிரிவுகளிலேயே இந்த ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதில் தொழில்முறைப் பொறுப்பு அலுவலகத்தின் ஊழியர் எண்ணிக்கை 29 இலிருந்து 16 ஆகக் குறைந்துள்ளதுடன், கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் புதிய விசாரணைகளின் எண்ணிக்கையும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அரசாங்க சட்டத்தரணிகளுக்கு எதிராகப் பெறப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2005ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளபோதிலும், முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, தலைமைப் பரிசோதகர் அலுவலகத்திலிருந்து 99 ஊழியர்கள் விலகியுள்ளதுடன், தற்போதைய நிர்வாகத்தின் கீழ் அரசியல் ரீதியாக உணர்வுபூர்வமான பல வழக்குகள் தொடர்பான விசாரணைகள் தவிர்க்கப்படுவதாகவும் முன்னாள் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நீதித் திணைக்களத்தின் பேச்சாளர்கள், தமது கண்காணிப்புப் பிரிவுகள் சுயாதீனமாகவும் நேர்மையாகவும் இயங்கி வருவதாகவும், சட்டத்தரணிகளின் தவறுகள் குறித்துத் தொடர்ந்தும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மகிந்தவின் மகனுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை - உயர் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மிக முக்கிய ஆவணங்கள்!