லண்டன் சென்ற மற்றுமொரு இந்திய விமானம் 3 மணி நேரத்தின் பின்னர் தரையிறக்கம்
இந்தியாவில் இருந்து லண்டன் நோக்கி சென்ற விமானம் ஒன்று மூன்று மணி நேரத்தின் பின்னர், மீண்டும் ஏறிய இடத்தில் தரையிறங்கியுள்ளது.
மும்பை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 5:39 மணிக்கு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு லண்டன் நோக்கி புறப்பட்டது.
எனினும் மூன்று மணி நேரத்தின் பின்னர் குறித்த விமானம், மீண்டும் மும்பை விமான நிலையத்தில் வந்தடைந்துள்ளது.
வான்வழித் தாக்குதல்
ஈரானில் நிலவும் சூழ்நிலை மற்றும் அதன் வான்வெளி மூடப்பட்டதால் விமானம் திரும்பி வந்ததாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த விமானத்தில் இருந்து பயணிகளை அவர்களின் இடங்களுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஒபரேஷன் ரைசிங் லயன் என்று பெயரில் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இன்று அதிகாலை இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கனடாவிலிருந்து பிரிய விரும்பும் மாகாணமொன்றின் மக்கள்: அமெரிக்க அதிகாரிகளை சந்தித்ததால் பரபரப்பு News Lankasri
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam