உயிரை பணயம் வைத்து சாவகச்சேரி பொலிஸார் அதிரடி:குவியும் மக்கள் பாராட்டு!
அனுமதிப்பத்திரம் இன்றி கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மணல் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது நேற்று (19) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்றிரவு 12.15 மணியளவில் பளையில் இருந்து அச்சுவேலி நோக்கி மணல் கடத்திச் சென்ற கனரக வாகனத்தை சாவகச்சேரி பொலிஸார் வழிமறித்தவேளை அந்த வாகனம் நிற்காமல் சென்றது.
வழக்குத் தாக்கல்
இதன்போது சாவகச்சேரி பொலிஸார் வேகத்தடையை வீதியில் போட்டவேளை கனரக வாகனத்தின் சக்கரங்கள் காற்றுப் போனது.
இந்தநிலையில் கனரக வாகனத்தை நிறுத்திவிட்டு சாரதி தப்பிச் சென்றுள்ளதையடுத்து சாவகச்சேரி பொலிஸார் வாகனத்தை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.
இது குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் பாராட்டு
அண்மைக்காலமாக அனுமதிப்பத்திரம் இன்றி மணல் கடத்தி வரும் கனரக வாகனங்களை மடக்கிப் பிடிப்பதற்கு சாவகச்சேரி பொலிஸார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமது உயிரையும் துச்சமாக மதித்து, சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக செயற்படும் சாவகச்சேரி பொலிஸாரின் இவ்வாறான செயற்பாடுகளை மக்கள் பாராட்டி வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
