கிளிநொச்சி ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனதிற்கு கல்வி அமைச்சர் விஜயம்
கிளிநொச்சி ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனதிற்கு கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
குறித்த விஜயமானது, கிளிநொச்சி - அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தின் செயற்பாடுகளை கண்காணிக்கும் மற்றும் குறை நிறைகளுக்கு தீர்வுகாணும் நோக்குடன் இடம்பெற்றுள்ளது.
தொழில்சார் கல்வி செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்த கல்வியமைச்சர், நிறுவன முதல்வர் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
தடையற்ற தொழிற்சார் கற்றல் செயற்பாடுகள்
மேலும், இந்நிறுவனத்தின் செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுக்கவும், தொழில்சார் கற்றல் செயற்பாடுகளை மேம்படுத்தும் வகையிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது, நிகழ்வில் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கயன் இராமநாதன், இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவன தலைவர் மேஜர் ஜெனரல் கல்ப சஞ்ஜீவ, கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |