வாகன விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் பலி
தம்புள்ளை - கண்டி பிரதான வீதியின் விகாரை சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (05.2.204) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தளத்திலிருந்து பிரதான வீதியை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வீதியோரத்தில் இருந்த நபர் ஒருவரையும், குழந்தை ஒன்றை சுமந்து சென்ற பெண் ஒருவரையும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதி
இந்தவிபத்தில் படுகாயமடைந்த நபரும், குழந்தையை சுமந்து சென்ற பெண்ணும் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த பெண்ணும் நபரும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பெண்ணின் 9 மாத கைக்குழந்தை தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பண்டாரகம பகுதியில் வசிக்கும் 45 வயதுடைய ஒருவரும், அடையாளம் காணப்படாத 43 வயதுடைய பெண்ணுமே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். சடலங்கள் தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் காயமடைந்துள்ளதுடன், அவர் பொலிஸ் பாதுகாப்பில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தீவிரமடையும் வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம் - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
குறைந்த காற்றழுத்தப் பகுதி! அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளவும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri
ஈஸ்வரி கொடுத்த அழுத்தத்திற்கு ஜனனி கொடுத்த பதிலடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
இந்த ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ ஜூன் 4 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் பிரீமியர்! Cineulagam