இந்தியாவுக்காக மூன்று வடிவப் போட்டிகளிலும் விளையாட விரும்பும் சூர்யகுமார்
இந்தியாவின் 20க்கு 20 கிரிக்கெட் போட்டியில் புதிய தலைவர் சூர்யகுமார் யாதவ், இந்தியாவுக்காக அனைத்து வடிவங்களிலும் விளையாடுவதை தாம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சூர்யகுமார் யாதவ் 20க்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் மாத்திரமே விளையாடுவார் என்று தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் அண்மையில் உறுதிப்படுத்திய நிலையிலேயே, தமது திறந்தநிலை கருத்தை சூர்யகுமார் யாதவ் வெளியிட்டுள்ளார்.
3 வகையான ஆட்டங்கள்
இதன்படி, இந்தியாவுக்காக 3 வகையான ஆட்டங்களிலும் விளையாட விரும்புவதாக சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், விளையாட்டின் 3 வடிவங்களிலும் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த தாம் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணி, இலங்கை அணிக்கு எதிராக 27 வருடங்களின் பின்னர் ஒருநாள் தொடரில் தோல்வி அடைந்த நிலையிலேயே சூர்யகுமாரின் கருத்து வெளியாகியுள்ளது.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri