500மில்லியன் கொடுத்து அசாத் சாலியை வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சித்த சுரேஷ் சாலே
2020 ஜனவரி 23ஆம் திகதியன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் பல விடயங்களை முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி பகிரங்கமாக குறிப்பிட்டிருந்தார்.
தன்னை நாட்டை விட்டு வெளியேற 500 மில்லியன் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கொடுத்தாகவும் குறிப்பிட்டிருந்தார்.
பணம், விசா மற்றும் எந்த ஊரில் சென்று தங்க வேண்டுமோ அதற்கு எல்லா வசதிகளையும் ஏற்படுத்தி தருவதாக தெரிவித்ததாகவும் அசாத் சாலி குறிப்பிட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து சிறிது காலத்தில் அசாத் சாலி கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவை சிஐடியில் வைத்து சித்திரவதைக்குள்ளாக்கபட்டுள்ளதாக வெளிவரும் தகவல்கள் கவலைக்குரியது என்று அசாத் சாலி தெரிவித்தார்.
லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும், கோட்டாபய ராஜபக்ச ஆட்சியமைப்பதற்காகதான் இந்த உயிர்த்தஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..
இராணுவத்தின் முதுகெலும்பை உடைக்கப் பாரிய சதி! சுரேஷ் சலேவின் உருவப்படத்துடன் சாகர காரியவசம் முழக்கம்
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan
ராகு - கேது ஆசியால் டிசம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan