விமல் வீரவங்சவுக்கு எதிரன வழக்கில் சாட்சி விசாரணைகள் ஆரம்பம்
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு எதிரான வழக்கின் சாட்சி விசாரணைகள் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் இன்று(8) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச, அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் தனது சட்டப்பூர்வ வருமானத்தை விட 75 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களைக் குவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், அவருக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கு, இன்று (08) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விடுதலைப் புலிகளின் நோக்கத்தை நிறைவேற்ற இடமளிக்க போவதில்லை! சுரேஸ் சலேவுக்கான போராட்டத்தில் விமல் வீரவன்ச
சாட்சி விசாரணைகள் ஆரம்பம்
கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹைல் முன்னிலையில் குறித்த வழக்கின் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.
இலஞ்ச ஆணைக்குழுவின் சார்பில் முன்னிலையான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆசாத் நவாவியின் வழிகாட்டுதலின் கீழ், அரசுத் தரப்பு சாட்சிகளிடமிருந்து இன்றைய தினம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.

அதன்பிறகு, வாக்குமூலங்கள் மீதான மேலதிக விசாரணை ஜூன் 25 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, கடந்த 2010 முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தனது சட்டப்பூர்வ வருமானத்தை விட 75 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களைக் குவித்து, இலஞ்ச, ஊழல் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்துள்ளதாகக் குற்றம் சாட்டி, முந்தைய நல்லாட்சி அரசாங்கத்தின் போது இலஞ்ச ஆணைக்குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தது.