விடுதலைப் புலிகளின் நோக்கத்தை நிறைவேற்ற இடமளிக்க போவதில்லை! சுரேஸ் சலேவுக்கான போராட்டத்தில் விமல் வீரவன்ச
சுரேஷ் சலேவை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து, முள்ளிவாய்க்கால் பழிவாங்களை நிறைவேற்றவே அரசாங்கம் முயற்சிக்கிறது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
புலிகளின் நோக்கத்தை நிறைவேற்ற நாங்கள் இடமளிக்க போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம்
பயங்கராவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள உளவுத்துறையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேவை பாதுகாப்பதற்காக இன்று (08) திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு விமல் வீரவன்ச தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சுரேஷ் சலேவை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து, முள்ளிவாய்க்கால் பழிவாங்களை நிறைவேற்றவே அரசாங்கம் முயற்சிக்கிறது. புலிகளின் நோக்கத்தை நிறைவேற்ற நாங்கள் இடமளிக்க போவதில்லை.
சுரேஸ் சலேவுக்காக தொடர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார். இந்த போராட்டத்தில் விமல் வீரவன்ச,உதய கம்மன்பில உட்பட அரசியல் தரப்பினர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.


படு பிரம்மாண்டமான பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம்... எத்தனை கோடி? Cineulagam
வீராணம் திட்டத்திற்கு லஞ்சம் கேட்ட கலைஞரின் மருமகன் - சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் News Lankasri