முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய விரைவில் கைது! அரசாங்கத்தின் அதிரடி நகர்வு அம்பலம்..
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மிக விரைவில் கைது செய்வதற்கான அதிரடித்திட்டமொன்றை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் அந்தரங்கச் செயலாளரும், நவஜனதா பெரமுண (புதிய மக்கள் முன்னணி) கட்சியின் தலைவருமான சுகீஸ்வர பண்டார, மேற்கண்ட தகவலை அம்பலப்படுத்தியுள்ளார்.
அதிரடி நகர்வு
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைக் கைது செய்ய ஒரு திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்களிலிருந்து தெரிய வந்துள்ளது.

உயிர்த்த ஞாயிறன்று நாட்டில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளின் தொடர்பில் இந்தக் கைதுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
அந்த நோக்கத்திற்காகவே முன்னாள் ஜனாதிபதிக்கு ஏற்கனவே பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயல்முறை அரசியல் நலன்களுக்காக நடத்தப்படும் ஒரு அரசியல் பழிவாங்கல் வேட்டை என்றும் சுகீஸ்வர பண்டார தொடர்ந்தும் குற்றம் சாட்டியுள்ளார்.
நீட் தேர்வு பிரச்சனைக்காக போராடும் மாணவர்களுக்கான நடிகர் சூர்யா எடுத்த முடிவு... என்ன தெரியுமா? Cineulagam
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan
ஆயுதப்படைகள் எப்போதும் தயார்., ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு பிரித்தானியா கொடுத்த பதில் News Lankasri
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam