தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு சஜித்துக்கே! ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கை
தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கே (Sajith Premadasa) என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
“ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்குப் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வந்துள்ளனர். இவர்களில் கள்வர்கள் அற்றவர்களை நாம் இணைத்துக்கொள்வோம்.
பலமான அணி
இந்த நாட்டில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு சஜித்துக்கே. பல பெரும்பான்மைக் கட்சிகளும் சஜித்துக்கே ஆதரவு. எனவே, இவை அனைத்தும் இணைந்து பலமான அணி உருவாகும்.

இன்னும் மூன்று பூரணை (போயா) தினங்கள் முடிந்த பின்னர் சஜித் பிரேமதாசவே ஜனாதிபதியாக இருப்பார். இது உறுதி” என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சந்தோஷ செய்தியை வெளியிட்டுளள சிறகடிக்க ஆசை வெற்றி மற்றும் அவரது மனைவி... ஆனா இது வேற நியூஸ் Cineulagam
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri