யாழில் உணவகமொன்றுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
யாழ்ப்பாணம் (Jaffna) ஏழாலை பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் உணவகமொன்றினை நடாத்திய உரிமையாருக்கு 15 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த நீதிமன்று, உரிமையாளரை கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளது.
ஏழாலை பகுதியில் பொது சுகாதார பரிசோதகரால் முன்னெடுக்கப்பட்ட திடீர் பரிசோதனையில், சுகாதாரமற்ற முறையில், சுகாதார சீர்கேட்டுடன் குறித்த உணவகம் இயங்கி வந்த நிலையில், அதன் உரிமையாளருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு நேற்றைய தினம் (06.06.2024) வியாழக்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மன்றில் முன்னிலையான உரிமையாளர் தன் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து, 15 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த மன்று, உரிமையாளரை கடுமையாக எச்சரித்து விடுவித்தது.
விதிக்கப்பட்ட தண்டம்
அதேவேளை, கடந்த வாரம் சுன்னாகம் பகுதியில் உள்ள உணவகமொன்றில் காலாவதியான மற்றும் உடல்நலத்திற்கு தீங்கு ஏற்படுத்த கூடிய, உண்பதற்கு ஒவ்வாத உணவு பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக உரிமையாளருக்கு 83 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam
