யாழில் இளைஞர்களை குறி வைத்து புலம்பெயர்ந்தோர் நடத்தும் மோசடிகள்
வெளிநாடுகளில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) வருகை தருவோரால், வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி கிராமப் புற இளைஞர்கள் ஏமாற்றப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ஏமாற்றப்படும் இளைஞர்களிடம் இருந்து 30 தொடக்கம் 40 இலட்சம் ரூபாய் வரையில் பணமோசடி இடம்பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்களின் ஏமாற்று நாடகத்தை அறியாத அப்பாவி இளைஞர்கள் போலி வாக்குறுதிகளை நம்பி பணத்தை இழக்கின்றனர். இது தொடர்பான ஏராளமான முறைப்பாடுகள் யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரி பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
எனவே, இவ்வாறான மோசடிகள் தொடர்பில் அவதானமாகவும் விழிப்பாகவும் இருப்பது அவசியம் என ஜெகத் நிஷாந்த மேலும் கூறியுள்ளார்.

அத்துடன், அண்மைக்காலமாக இவ்வாறான மோசடிகள் அதிகரித்து வருவதாகவும் வெளிநாடுகளில் இருந்து வருவோரே இத்தகைய மோசடியில் அதிகம் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கர்ப்பமாக இருக்கும் தங்கமயில் மீது கல்லை தூக்கி போட போன சரவணன்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
கடலுக்குள் கட்டப்படும் மிகப்பெரிய சுரங்கப்பாதை., ஜேர்மனி டு டென்மார்க் 7 நிமிடத்தில் பயணம் News Lankasri