அம்பாந்தோட்டையில் ஒன்பது வயது சிறுவனை கத்தியால் குத்திய 14 வயது சிறுவன்
அம்பாந்தோட்டை - அங்குனுகொலபலஸ்ஸ வேடிய பிரதேசத்தில் வசிக்கும் 13 வயதுடைய மாணவன் ஒருவன் அயல் வீட்டில் இருந்த 8 வயது சிறுவனை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், காயங்களை ஏற்படுத்திய பின்னர் குறித்த மாணவன் விஷத்தையும் அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு சிறுவர்களும் கையடக்கத் தொலைபேசியில் வீடியோக்களை பார்ப்பதற்கும், வீடியோ கேம் விளையாடுவதற்கும் அடிமையாகியுள்ள நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலதிக சிகிச்சை
இதன்படி 13 வயது மாணவன் கடந்த 5ம் திகதி பெற்றோருடன் அருகில் உள்ள தனது காய்கறி தோட்டத்திற்கு சென்றுள்ளார்.பின், பெற்றோர் அங்கிருக்கையில் வீட்டிற்கு வந்த மாணவன் அயல் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இதன்போது 8 வயது சிறுவன் கையடக்கத் தொலைபேசியில் வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்ததாகவும், குழந்தையின் தாய் துணி துவைத்துக் கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில் 8 வயது சிறுவன் தன்னை காப்பாற்றுமாறு கூக்குரலிட்டதையடுத்து பக்கத்து வீட்டு பெண் ஒருவர் சென்று பார்த்துள்ளார். அந்த சிறுவன் கத்தியால் குத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் 8 வயது சிறுவன் குட்டிகல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பொலிஸார் விசாரணை
மேலும் 13 வயதுடைய மாணவனும் கத்திக்குத்து தாக்குதலுக்கு பின்னர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் அங்குனுகொலபலஸ்ஸ பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் 13 வயது மாணவன் கத்தியால் குத்திய பின் விஷம் அருந்தியது தெரியவந்துள்ளது.
விஷம் அருந்திய மாணவன் மேலதிக சிகிச்சைக்காக எம்பிலிப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குனுகொலபலஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri