போதையில் விடுதியில் சிக்கிய ஜீவன் கட்சியின் முக்கிய புள்ளி! பிரதி அமைச்சர் அதிரடி விஜயம்
ஹட்டன் 'TVTC' தொழிற்பயிற்சி நிலைய விடுதியில் அலுவலக நேரத்தில் மதுபோதையில் இருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கிய அங்கத்தவர் ஒருவரை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் எச்சரித்துள்ளார்.
பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் இயங்கும் ஹட்டன் 'TVTC' தொழிற்பயிற்சி நிலையத்திற்கு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் அமைச்சின் செயலாளர் பிரதாப் சந்திரகீர்த்தி ஆகியோர் நேற்யைதினம் (11.12.2024) திடீர் விஜயத்தினை மேற்கொண்டனர்.
இதன்போது, அங்கு இடம்பெறுகின்ற அனைத்து நடவடிக்கைகளையும், பார்வையிட்ட அவர்கள், மாணவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் மற்றும் அவர்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றுக்கான தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளனர்.
எச்சரிக்கை
அதேவேளை, எதிர்வரும் காலங்களில் இந்தத் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு அதிகமான புதிய மாணவர்களை இணைத்து கொள்வது தொடர்பாக ஆலோசனையும் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, தொழிற்பயிற்சி நிலைய விடுதிக்கு சென்ற பிரதி அமைச்சர், அங்கு மதுபோதையில் இருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினரை எச்சரித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |