ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்துள்ள முக்கிய நாடு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை (Anura Kumara Dissanayaka), ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விஜயம் செய்யுமாறு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்துக்கான தூதுவர் காலித் நாசர் அல் அமெரி, இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (12) இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தின் போதே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நட்புறவு
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் அர்ப்பணிப்பு குறித்து ஜனாதிபதி அநுரவிடம் தூதுவர் உறுதியளித்துள்ளார்.
அத்துடன், அபிவிருத்தியடைந்த மற்றும் வளமான தேசத்தை உருவாக்குவதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கும் அவர் தமது ஆதரவை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முதலீடுகளை அதிகரிப்பதற்கும், புத்தாக்கம் மற்றும் நவீனமயமாக்கலுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கும் அவர் திட்டங்களை இதன்போது அறிவித்துள்ளார்.
அதேவேளை, ஐக்கிய அரபு இராச்சியத்தில், தற்போது பணிபுரியும் 150,000 இலங்கையர்கள் அந்த நாட்டுக்கு ஆற்றும் முக்கிய பங்கு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |