ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனையை நிகழ்த்திய சன்ரைசர்ஸ் ஐதராபாத்
ஐ.பி.எல்(IPL) தொடரின் 68ஆவது லீக் போட்டி புதுடெல்லியில் நடைபெற்றது.
இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
நாணயச்சுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி, முதலில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 278 ஓட்டங்களை குவித்தது.
இது ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட 3 ஆவது அதிகபட்ச இலக்கு ஆகும்.
புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடம்
கிளாசன் அதிரடியாக ஆடி 39 பந்தில் 9 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 105 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
டிராவிஸ் ஹெட் 40 பந்தில் 76 ஓட்டங்களும், அபிஷேக் சர்மா 16 பந்தில் 32 ஓட்டங்களும், இஷான் கிஷன் 29 ஓட்டங்களும் எடுத்தனர்.
இதையடுத்து, 279 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இறுதியில், கொல்கத்தா அணி 18.4 ஓவரில் 168 ஓட்டங்களுக்குள் சுருண்டது.
இதன்மூலம் 110 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடம் பிடித்தது.
4 அதிகபட்ச ஸ்கோர்
இந்த போட்டியில் 278 ஓட்டங்கள் குவித்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் முதல் 4 அதிகபட்ச ஸ்கோர்களை பதிவு செய்த அணி என்ற சாதனையை ஐதராபாத் அணி படைத்துள்ளது.
மேலும், ஒரு புதிய சாதனையையும் ஐதராபாத் அணி படைத்துள்ளது. அதாவது, டி20 போட்டிகளில் அதிகமுறை 250க்கும் மேல் ரன்களை குவித்த அணி என்ற சாதனையை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி படைத்துள்ளது.
ஐதராபாத் அணி ஒரு இன்னிங்சில் 5 முறை (287, 286, 277, 266, 278) 250 ஓட்டங்களுக்கு மேல் அடித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 1 நாள் முன்

இந்தியா அளித்த அதிர்ச்சி வைத்தியம்... சீனா, துருக்கியிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கும் பாகிஸ்தான் News Lankasri
