கொழும்பு உட்பட பல பகுதிகளில் வெப்பநிலை தீவிர எச்சரிக்கை நிலையில்..! மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
நாடு முழுவதும் பல பகுதிகளில் நிலவும் உயர் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று நண்பகல் 12.13 மணிக்கு தெஹிவளை, மகரகம, பன்னிப்பிட்டிய, பாதுக்க, எஹெலியகொட, மஸ்கெலிய மற்றும் பொத்துவில் உள்ளிட்ட பல பகுதிகளில் சூரியன் நேர் உச்சியில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நெருக்கமாகும் சூரியன்
இன்று (07) 12:13 மணியளவில் குறித்த பகுதிகளில் சூரியன் மிக நெருக்கமாக உச்சம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் கவனம் தேவைப்படும் அளவிலான வெப்பம் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சூரியனின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஏப்ரல் 05ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இலங்கை நிலப்பரப்பிற்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நிலவும் உயர் வெப்பநிலை காரணமாக, மக்கள் நாள் முழுவதும் நீரோற்றத்துடன் இருக்கவும், போதுமான அளவு தண்ணீர் அருந்தவும், முடிந்தவரை நிழலில் இருக்கவும், அடிக்கடி ஓய்வெடுக்கவும், இலகுவான, வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியவும், கடினமான வெளிப்புறச் செயல்பாடுகள் மற்றும் கடுமையான உடல் உழைப்பைக் குறைக்கவும், அத்துடன் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.