கட்டுநாயக்க விமான நிலையத்தில் 4 இலங்கை பயணிகள் கைது
இலங்கைச் சேர்ந்த நான்கு பயணிகள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான மேற்கத்திய சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்தி வர முயன்ற குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுங்கத் திணைக்களம்
இவர்களில் 18 முதல் 25 வயதுக்கு இடைப்பட்ட மூன்று இளைஞர்களும், 45 வயதுடைய பெண் ஒருவரும் அடங்குவதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்கள் எந்தவொரு பொருளும் தம்மிடம் இல்லை எனக் கூறி வெளியேற முயன்ற போதே அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அவர்களது 8 பயணப் பொதிகளைச் சோதனையிட்ட போது, அவற்றுக்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.
சட்ட நடவடிக்கை
கைப்பற்றப்பட்ட பொதிகளில் ஊசி மருந்துகள், மாத்திரைகள் என சுமார் 65 கிலோகிராம் எடையுள்ள மேற்கத்திய மருந்துகள் காணப்பட்டன.

இந்த மருந்துகள் எவையும் சுங்கத் திணைக்களத்திடம் முறையாக அறிவிக்கப்படவில்லை. இவற்றை இறக்குமதி செய்வதற்கு சுகாதார அமைச்சு அல்லது இலங்கை தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் எவ்வித அனுமதியும் பெறப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள சுங்க அதிகாரிகள், மருந்துகளை அரசுடமையாக்குவதற்கும் சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.