இளங்குமரன் எம்.பி. மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒத்திவைப்பு
யாழ். மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையான வழக்கு ஒன்று தொடர்பில், நீதிமன்றுக்கு வெளியில் வெளியிட்ட பகிரங்கக் கருத்து மூலம் நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்தை ஆளும் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் இழைத்தார் என்று தெரிவித்து, ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எதிர்மனுதாரரான இளங்குமரன்
இந்த வழக்கு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஆனால், எதிர் மனுதாரரான இளங்குமரன் எம்.பி. இந்தியா செல்கின்றமையால் வழக்கைப் பிறிதொரு நாளுக்கு ஒத்திவைக்குமாறு அவர் ஏற்கனவே மனு செய்திருந்தார்.
அதன் அடிப்படையில், வழக்கைப் பிறிதொரு திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 3 நாட்கள் முன்
திடீரென பற்றியெரிந்த ஈரான் தலைநகர் - அமெரிக்காவை அச்சுறுத்தும் ஈரானின் ஸ்லீப்பர் செல்ஸ் News Lankasri