திருகோணமலை நீதிமன்றத்தில் கஸ்ஸப்ப தேரரை முன்னிலைப்படுத்த உத்தரவு
பலாங்கொட கஸ்ஸப்ப தேரரை அவருக்கு எதிராப பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையின் பிரகாரம்' திருகோணமலை நீதிபதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு அனுராதபுரம் பிரதம நீதவான்' உத்தரவிட்டுள்ளார்.
திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையொன்றை வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த 11ஆம் தேதி திருகோணமலை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட ஒரு வழக்கில் முன்னிலையாகத் தவறியதற்காக, பலாங்கொட கஸ்ஸப்ப தேரருக்கு எதிராக திருகோணமலை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
சந்தேக நபர்களைப் பார்வையிட்டு
அதன் பின்னர் அனுராதபுரம் சத்தியாக்கிரக நிகழ்வின் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கடந்த புதன்கிழமை மாலை அனுராதபுரம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகளும், மூன்று சிவிலியன்களும் தற்போது அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த வியாழன் இரவு (12) சந்தேக நபர்கள் சிகிச்சை பெற்று வந்த அனுராதபுர போதனா மருத்துவமனைக்கு அனுராதபுர பிரதம மாஜிஸ்திரேட் நேரடியாகச் சென்று, சந்தேக நபர்களைப் பார்வையிட்டு, அவர்களை நவம்பர் 26 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளார்.
அத்துடன் சந்தேக நபர்களின் மனநலத்தைப் பரிசோதிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தினார்களா என்பதைக் கண்டறிய தனியான மருத்துவப் பரிசோதனை நடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், கஸ்ஸப்ப தேரருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையின் பிரகாரம் அவரைத் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, அது தொடர்பில் அனுராதபுர நீதவான் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு அனுராதபுர தலைமையக பொலிசாருக்கு பிரதம மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.