தமிழ் மக்கள் தொடர்பில் உலகிற்கு சுமந்திரன் வெளிப்படுத்திய முக்கிய செய்தி!
கதவடைப்பு போராட்டத்திற்கான சுமந்திரனின் அழைப்பு, தமிழ் மக்கள் போராட முடியாத இனம் என்பதை காட்டுவதற்காக செய்யப்பட்ட செயல் என்றே சந்தேகம் எழுந்துள்ளது என்று கனடாவை சேர்ந்த சுவாமி சங்கரானந்தா தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,''வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால் சுமந்திரன் போன்றவர்கள் தமது அரசியல் செல்வாக்கை அதிகரித்துக்கொள்ளவதற்கே இந்த கதவடைப்பு போராட்டத்தை பயன்படுத்திக்கொள்ள முயற்சித்தார்கள்.
முஸ்லிம் காங்கிரஸிடம் மாத்திரமல்லாமல் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள், தமிழ் சமூகத்தினரையும் சுமந்திரன் ஒன்று திரட்டியிருக்க வேண்டும்.''என கூறினார்.
இது குறித்து அவர் கூறியுள்ள மேலதிக தகவல்களை இந்த காணொளியில் விரிவாக காணலாம்...,
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் - காலை திருவிழா




