தென் கொரியாவை நோக்கி படையெடுக்கும் இலங்கையர்கள்
சமீபத்திய மாதங்களில் தென் கொரியாவில் வேலைவாய்புக்காக 2,522 இலங்கை இளைஞர்கள் சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதில் உற்பத்தித் துறையின் கீழ் பணியாற்ற இன்று (19) புறப்பட்ட 60 தொழிலாளர்களும் அடங்குவர்.
4 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் வரை
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் - கொரிய மனிதவள அபிவிருத்தி நிறுவகத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் அனுப்பப்பட்ட 923வது குழு இதுவாகும்.
2025 ஆம் ஆண்டில் இதுவரை 85 பெண்கள் வேலைவாய்ப்புக்காக வெளியேறியுள்ள நிலையில், பெண்களின் பங்கேற்பில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.
வெளிப்படையான கணினி அடிப்படையிலான தேர்வைத் தொடர்ந்து உற்பத்தி, கட்டுமானம், மீன்பிடித்தல் மற்றும் விவசாயம் ஆகிய தொழில்துறைகளுக்காக E-9 விசா பிரிவின் கீழ் தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறார்கள்.
ஒப்பந்தம் முடிந்த பிறகு மீண்டும் நுழையும் விருப்பத்துடன், இலங்கையர்கள் தென் கொரியாவில் 4 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் வரை பணியாற்றலாம்.
2024 ஆம் ஆண்டில், 7,122 இலங்கையர்கள் அங்கு வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கணவர் இறந்த பின்னரும் தாலியுடன் இருக்கும் பிரியங்கா- அவ்வளவு பிரியம்.. நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
