அமைச்சர் ஜயக்கொடி மீது விசாரணை! நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணையம் கூறவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு, அவர் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்ட பிறகு வந்த பிரச்சினை அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், ஜயக்கொடி பணியாற்றிய நிறுவனத்தின் பல கீழ்நிலை ஊழியர்கள் செய்த ஒரு குறைபாட்டின் காரணமாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் உருவாகும் விளைவுகள்
இந்த சம்பவத்தால் அரசாங்கத்திற்கு எந்த இழப்பும் இல்லை எனவும் குமார ஜயக்கொடி சேவையிலிருந்து நீக்கப்பட மாட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், எதிர்காலத்தில் உருவாகும் விளைவுகளை சமாளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



