கைதியை கொலை செய்ய சிறைக்குள் சயனைடு! பல்லியை வைத்து செய்த சோதனையில் மிரண்டுபோன அதிகாரிகள்
அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் நடத்தப்பட்ட சோதனையின் போது, சயனைடு (cyanide) குப்பி ஒன்றை சிறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கமாண்டோ கவிஷ்க குமாரவைக் கொலை செய்வதற்காக இந்த சயனைடு குப்பி சிறைச்சாலைக்குள் கொண்டு வரப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஆரம்பகட்ட விசாரணை
இதேவேளை, குறித்த சயனைடு குப்பி,போதைப்பொருள் கடத்தல்காரரான குடு சலிந்துவின் உதவியாளரான தரிந்து மதுசங்க என்பவரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மேலும், சிறைச்சாலைக்குள் கொண்டுவரப்பட்ட சயனைடை, பரிசோதிப்பதற்காக அதனை கொண்டு வந்த குழு, ஒரு பல்லியைப் பிடித்து அதற்கு ஊசி மூலம் செலுத்தியதாகவும், பல்லி சம்பவ இடத்திலேயே இறந்ததாகவும் தெரியவந்துள்ளது.
You may like this,
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri